Thursday, April 3, 2014

தேர்தல் செலவு: ரூ.10 ஆயிரம் கோடி கறுப்புப் பணம்!

 Thursday, April 03, 2014
புதுடெல்லி::பாராளுமன்ற தேர்தலுக்கு மொத்தம் ரூ. 30 ஆயிரம் கோடி செலவிடப்பட உள்ளது. இதில் கறுப்புப் பணம் ரூ.10 ஆயிரம்  கோடி  என்பது பிரபல நிதி மேலாண்மை சேவைகள் நிறுவனமான சி.எம்,எஸ். மேற்கொண்ட ஆய்வு முடிவில்  தெரிய வந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு  அளவு கணக்கில் வராத கறுப்புப் பணமாகப் பயன்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.இதுகுறித்து சி.எம்.எஸ். நிறுவனத் தலைவர் பாஸ்கரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:
நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலின்போது மேற்கொள்ளக் கூடிய மொத்தச் செலவு குறித்து ஆய்வு நடத்தப் பட்டது. இந்த ஆய்வின்படி அரசு தரப்பிலான அதிகாரப்பூர்வ செலவுகள் மற்றும் கட்சிகளின் செலவினங்களைச் சேர்த்தால் மொத்தம் ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப் பட்டு ள்ளது. இதில் கணக்கில் வராத கறுப்புப் பணம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி வரை செலவிடப்படலாம். 
வேட்பாளர்கள்  தனிப்பட்ட வகையில் ரூ.10 ஆயிரம் கோடி முதல் ரூ.13 ஆயிரம் கோசி வரை செலவிடப்படலாம் என்று தெரிகிறது. ஓட்டுக்கு நோட்டு என்ற கணக்கில் வாக்காளர்களை ஈர்ப்பதற்கு பெரும்பாலும் கறுப்புப் பணத்தை தான் அரிசியல்வாதிகள் செலவிடுவார்கள். குறி்ப்பாக தேர்தலுக்கு முந்தைய 3 அல்லது 4 நாள்களில் கறுப்புப் பணத்தின் புழக்கம் அதிகமாக இருக்கும். 
வேட்பு மனுதாக்கல்,  பிரசாரப் பயணம் உள்ளிட்ட  பணிகளுக்காக பணம் செலவிடப்படுகிறது. சுமார் 81.4 கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் இந்தத் தேர்தலில் தனிநபர் வீதச் செலவு தலா ரூ. 400 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மொத்தச் செலவில் ஊடக விளம்பரங்களுக்காக 25 சதவீதமும், தேர்தல் ஆயத்தப் பணிகளுக்காக 20 சதமும், தொண்டர்களுக்கு செலவு செய்ய 12 சதவீதமும், வாக்காளர்களுக்கு  பணம் தருவதற்கு 10 முதல் 15 சதமும் பணம் செலவிடப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளு மன்றத் தேர்தலி்ல்  ரூ.12 ஆயிரம் கோடி வரை செவிடப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய 1996-ம் நடைபெற்ற பாராளு மன்றத் தேர்தலி்ல் ரூ.2500 ஆயிரம் கோடி மட்டும் செலவிடப்பட்ள்ளது.  ஊழல் அதிகரித்திருப்பதாலும், கட்சிகள் தங்கள் செல்வாக்கைக் காட்டுவதற்காக போட்டிபோட்டுக்கொண்டு செலவு செய்வதாலும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என்றார் பாஸ்கரராவ்.

No comments:

Post a Comment