Friday, March 28, 2014
இலங்கை::இலங்கைக்கு எதிராக சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை ஒன்றை நடத்துவதை அனுமதிக்க முடியாது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
இலங்கையில் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித
உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையோ, உள்நாட்டு விசாரணையோ
நடத்தப்பட வேண்டும் என ரஷ்யா நம்பவில்லை, என இலங்கைகக்கான தூதுவர்
அலக்ஸ்சாண்டார் கர்ச்சாவா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் மனித உரிமைகளை மேம்படுத்த சிறந்த அர்ப்பணிப்புடனும் தூரநோக்குடன் செயற்பட்டுள்ளது.
அதேபோல் போர் நடைபெற்ற காலத்தில், புலிகளால் மேற்கொள்ளப்பட்டு
வந்த இரத்தம் சிந்தும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தற்போது இலங்கையில்
இல்லை எனவும் ரஷ்ய தூதுவர் கூறியுள்ளார்....
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு சர்வதேச நாடுகள் சில கோரி வருகின்றன.
அத்துடன் இந்த விடயத்தை முன்வைத்து இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கோரப்படுகிறது.
ஆனால் அவ்வாறு பொருளாதார தடை விதிப்பதாலும், விசாரணை மேற்கொள்ளப்படுவதாலும், இலங்கையில் உள்ள பொது மக்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் இலங்கை மீளமைப்பு செய்துள்ள விதம் தொடர்பில் தாம் திருப்தி அடைவதாகவும், இலங்கைக்கு எதிராக இவ்வாறான விசாரணை ஒன்று அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு, இலங்கை தொடர்பில் விசாரணை நடாத்த அதிகாரம் கிடையாது என ரஷ்யாவும், சீனாவும் தெரிவித்துள்ளன.
இலங்கை தொடர்பில் விசாரணை குழுவொன்றை நியமிக்க நவனீதம்பிள்ளைக்கு அதிகாரம் கிடையாது.
இவ்வாறான விசாரணை நடாத்த அதிகாரம் இருந்தால் அது குறித்து அந்த அதிகாரங்களை சுட்டிக்காட்ட வேண்டும். என தெரிவித்துள்ளனர்

No comments:
Post a Comment