Saturday, March 8, 2014

ஆப்கன் அதிபர், ஹமீது கர்சாயின், மூன்றாவது குழந்தை,அரியானாவில் பிரசவம்!

Saturday, March 08, 2014
குர்கான்:ஆப்கன் அதிபர், ஹமீது கர்சாயின், மூன்றாவது குழந்தை, அரியானா மாநில, தனியார் மருத்துவமனையில், கடந்த, செவ்வாய் கிழமை பிறந்தது.

அதிபர் கர்சாய் மனைவி, ஜீனத் குரேஷி, 44. டாக்டரான இவர், மூன்றாவது குழந்தை பெறுவதற்காக, கர்ப்பம் தரித்திருந்தார். பிரசவம் சிக்கலாக இருக்கும் என, அந்நாட்டு டாக்டர்கள் கூறியதால், இந்தியாவில் பிரசவம் மேற்கொள்ள அவர் முடிவு செய்தார். அதன் படி, அரியானா மாநிலத்தின், குர்கான் நகர, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜீனத்திற்கு, கடந்த செவ்வாய்கிழமை, பெண் குழந்தை பிறந்தது.
 
இலங்கை சுற்றுப் பயணத்தில் இருந்த கர்சாய், நேற்று முன்தினம், குர்கான் சென்று, மனைவி மற்றும் குழந்தையை பார்த்தார். ஜீனத்தின் பிரசவம், மிகவும் சிக்கலாக இருந்ததாகவும், அதை, இந்திய டாக்டர்கள், வெற்றிகரமாக செய்துள்ளதாகவும், இந்தியாவிற்கான, ஆப்கன் தூதர், ஷைதா முகமது அப்தாலி செய்தியாளர்களிடம் கூறினார். கர்சாய் - ஜீனத் தம்பதிக்கு, ஏற்கனவே, இரண்டு குழந்தைகள் உள்ளன.

No comments:

Post a Comment