Monday, March 3, 2014

தமிழ் சிங்கள, முஸ்லிம்கள் மீதான கொலைகள் புலிகளின் மனித உரிமை மீறல்களை மறந்த சி.வி. விக்கினேஸ்வரன்!

Monday, March 03, 2014
இலங்கை::தமிழ் மக்கள் மீதான மனித உரிமை மீறல்களுக்காக ஜெனீவாவில் விசாரணை நடத்தக்கோரும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாட்டில் இடம்பெற்ற தமிழ் முஸ்லிம், சிங்கள மக்கள் மீதான மனித உரிமை மீறல்கள் குறித்து எதுவுமே குறிப்பிட தவறியமை மிகவும் வருந்தத்தக்க செயல் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
 
இரண்டாயிரம் புலிகள் அமைப்பினால் வடபகுதியிலிருந்து சுமார் 72,000 முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற் றப்பட்டமை, காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்த முஸ்லிம்கள் சுட்டுக்கொல்ல ப்பட்டமை, அரந்தலாவ மற்றும் கெப்பித்திகொல்லாவ பகுதிகளில் நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் கொல்லப்பட்டமை குறித்தும் ஜெனீவாவில் விசாரணைக்குட்படுத்த வேண்டும் என அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.
எனவே புலிகளால் மேற்கொள் ளப்பட்ட இப்படுகொலை கள் குறித்தும் ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும்.

இவ்விடயங்களை நன்கு அறிந்துள்ள போதிலும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவற்றை மறைத்து தமிழ் மக்களுக்காக மட்டும் விசாரணை நடத்தக் கோருவது கவலைதருகிறது எனவும் அஸ்வர் எம்.பி தெரிவித்தார்.


 

No comments:

Post a Comment