Friday, March 28, 2014
இலங்கை::போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டு ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தை இலங்கை நிராகரிக்கிறது என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
இந்த தீர்மானம் நல்லிணக்க முயற்சிகளை பாதிக்கும். எனினும், நான் மனம் உடைந்து போகவில்லை. நல்லிணக்க முயற்சிகளை தொடருவேன். தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளாதது ஆறுதல் தருகிறது. ஊக்கம் தருகிறது. நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்த அவகாசம் தேவைப்படுகிறது எனவும் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச.
இதனிடையே, வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது ராஜீய உறவு ரீதியில் இலங்கைக்கு கிடைத்த வெற்றி என மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment