Monday, March 17, 2014

இரசாயன ஆயுதங்களை படையினர் எப்போதும் பயன்படுத்தியதில்லை: ருவான் வனிகசூரிய!

Monday, March 17, 2014
இலங்கை::இரசாயன ஆயுதங்களை படையினர் எப்போதும் பயன்படுத்தியதில்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இராணுவத்தினர் எல்லா சந்தர்ப்பங்களிலும் மரபு ரீதியான ஆயுதங்களை மட்டுமே பயன்படுத்தியதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து இவ்வாறான போலித் தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

படையினர் எப்போதும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும்,
புலிகளின் ஆயுதக் களஞ்சியங்களில் இரசாயன ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தையும் இராணுவத்தையும் அசௌகரியத்திற்குள் ஆழ்த்தும் நோக்கில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 

 

No comments:

Post a Comment