Tuesday, March 4, 2014

நவனீதம்பிள்ளை பிள்ளை அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்: அமைச்சர் மஹிந்த சமரசிங்க!

Tuesday, March 04, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. நவனீதம்பிள்ளையின் அறிக்கையின் இலங்கை அரசாங்கத்தின் பதில்கள் உள்ளடக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

நவனீதம்பிள்ளையின் அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் பதில் அறிக்கை ஒன்றை அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எனினும் அந்த பதிலறிக்கையின் உள்ளடக்கங்களை நவனீதம்பிள்ளை கருத்திற் கொள்ளத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

நவனீதம்பிள்ளையின் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் 18 பக்கங்களைக்கொண்ட பதில் அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைப் பிரதிநிதி ரவினாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.

பதிலறிக்கை அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் திருத்தங்கள் எதுவுமின்றி நவனீதம்பிள்ளை தனது அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இதன் மூலம் நவனீதம்பிள்ளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விதிமுறைகளை மீறி அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது,

சர்வதேச சுயாதீன விசாரணைகளை நிராகரித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இலங்கை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment