Saturday, March 1, 2014

கூடங்குளத்தில் மேலும் 2 உலைகள்: இந்தியா-ரஷியா முடிவு!

Saturday, March 01, 2014
புது டெல்லி::கூடங்குளத்தில் மேலும் 2 அணு உலைகளை கூட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்க இந்தியாவும், ரஷியாவும் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்டநாள்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள இது ருறித்து ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றவும் இரு நாடுகளைச் சேர்ந்த குழுவினர் டெல்லியில் முடிவு செய்தனர்.

இது தொடர்பாக டெல்லியில் இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் நடை பெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஸித், ரஸியா துணை பிரதமர் டிமித்ரின் ரோகோஜின் மற்றும் இரு நாடுகளையும் தெர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் அணு உலை, விண்வெளி ஆராய்ச்சி மின்னுர்பத்தி, பொருளாதார ஒத்துழைப்பு போன்றவற்றில் இரு நாடுகளும் முழு ஒத்துழைப்பு வழங்க இசைவு தெரிவிக்கப்பட்டது. இரு நாட்டு பிரதிநிதிகளும் கூடங்குளம் அணு உலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மதிப்பீடு செய்துள்ளனர்.

ஏப்ரல் அல்லது மே மாதம் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முழு அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யவும் முடிவு செய்யவும் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2-வது அணு உலை இந்த ஆண்டு இறுதிக்குள் மின்சார உறபத்தியை தொடஙகுவதற்கான நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிகிறது. அத்துடன் விரைவில் 3 மற்றும் 4-வது அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை நிறைவேற்ற இந்த கூட்டத்தில் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
 

No comments:

Post a Comment