Tuesday, February 11, 2014

முன்னாள் புலி உறுப்பினரும் அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிற்கு ஏற்றுவதாகக் கூறி பல மில்லியன் பண மோசடியில் ஈடுபட்ட மோசடி மன்னன் சிக்கினார்.!

Tuesday, February 11, 2014
லண்டன்::தமிழ் மக்களுக்கு உதவுவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட
முன்னாள் புலி உறுப்பினர்  பாலசிங்கம் பாலமுருகனின் சதி அம்பலம் .

சேரன் , மோகன் , பாலன் என பல் வேறு பேர் கொண்டு அழைக்கப்படும் இவர் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் . முன்னாள் புலி உறுப்பினரும் கூட . பின்னர் லண்டனில் தஞ்சம் புகுந்த இவர் போரால் பாதிக்கப்பட்டு பிழைப்புத் தேடி வெளிநாடு செல்ல இருந்தவர்களை அவுஸ்திரேலியா மற்றும் கனடாவிற்கு ஏற்றுவதாகக் கூறி பல மில்லியன் கணக்கான பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் .

தம் உயிர் காக்க மானம் காக்க காணி விற்று மாட்டை விற்று சிறுகச் சிறுக சேர்த்த பணத்தை முள்ளிவாய்க்காலில் எண்ணிலடங்கா துன்பங்களையும் பின்னர்  வாழ்வாதாரத்தை தேடி செல்ல இருந்தவர்களை ஏமாற்றி அவர்களது பணங்களை ஏப்பம் விட்டுள்ளார் .

ஆபிரிக்க நாடான மாலியில் கொண்டு வைத்துக் கொண்டு பணம் தந்தால் தான் ஏற்றுவதாகக் கூறி கறுப்பினத்தவர்களை வைத்து மிரட்டி , உயிர் அச்சுறுத்தல் விடுத்து பணம் பறித்துள்ளார் .

யாழில் வல்வெட்டித்துறை , வவுனியா காவல் நிலையங்களிலும் , கனடாவிலும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் பதியப்பட்டுள்ளன .

இவரின் ஏனைய மோசடிகள் ....
1 . போரால் பாதிக்கப்பட்டு ஓடி வந்த பெண்களை கறுப்பின அடியாட்களை வைத்து பாலியல் வல்லுறவில் ஈடுபடுத்தியுள்ளார் . அது மட்டுமல்லாது தனது முகவர்களுடனும் வெளிநாட்டிற்கு ஏற்ற வேண்டும் எனில் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார் .

2 . பண மோசடி .

3 . ஆபிரிக்காவில் சற்று காலத்திற்கு முன்னர் குடி வரவு அதிகாரிகளின் மூலம் பல இலட்சம் பேர் பிடிக்கப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பட்டதும் இவரின் சதிகளில் ஒன்றே . பணத்தை தாருங்கள் என ஏமாந்தவர்கள் தொடர்ந்து கேள்வி கேட்க வேறு வழி இன்றி தன் இனத்தவர்கள் என்றும் பாராது காட்டிக் கொடுத்துள்ளார் .

4. புலி போராளிகளையும், முக்கிய பொறுப்பாளர்களையும் கனடா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்றுவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டுமை.

5.பணத்தைக் கட்டி ஏமாற்றப்பட்டு நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டவர்கள்  அவர்களது வாழ்வு சீரழிக்கப்பட்டுள்ளது.

இக் குற்றச்சாட்டுக்களை அறிந்த சில செய்தியாளர்கள் கூப்பிட்டு கதைக்கும் போது தன் குற்றங்களை அம்பலப்படுத்த வேண்டாம் என மன்றாடிக் கேட்டு விட்டு இன்று அவர்களின் மேல் பொய் குற்றச்சாட்டுக்களை வைத்து நல்லவன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டுள்ளான் .

ஊரை அடித்து உலையில் போட்ட பணத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வெளிநாடு எடுத்து விட்டு ஏழை மக்கள் வயிற்றில் அடித்து சேர்த்த காசில் உல்லாசமாக நாட்களை கழித்து வருகின்றார் .

இவரால் பாதிக்கப்பட்ட 13 பேரின் சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன . அவர்களது காணொளி இணைப்பும் இன்னும் சிறிது நாட்களில் இணைக்கப்படும் . அத்தோடு வவுனியாவிலும் , யாழ்ப்பாணத்திலும் உள்ள இவரது பெண் முகவர்களின் சாட்சியங்களும் இணைக்கப்படும் .

இவர் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் 00447442440458 இந்த இலக்கத்தில் தொடர்பு கொண்டு தகவல் கூறினால் மீள பணம் பெற்றுக்கொடுக்க சட்ட அலுவலர்களைக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இரகசியம் பேணப்படும்.(London kanthi)

No comments:

Post a Comment