Saturday, February 15, 2014
இலங்கை::இலங்கைக்கு முழு அளவிலான ஆதரவு அளிக்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது. அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவுள்ள அமெரிக்காவின் முனைப்புக்களை முறியடிக்க முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளது,
பிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளன. இந்த முயற்சியை முறியடித்து, இலங்கைக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ரஷ்யாவின் சிரேஸ்ட ராஜதந்திரி அனட்டோலி விக்டரோவ்(Anatoly Victorov) இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை யுத்தம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் யுத்த நிலைமைகளை ருவாண்டாவுடன் ஒப்பீடு செய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் உள்விவகாரங்களில் வேறு நாடுகள் தலையீடு செய்யக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். உள் விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடு ஆபத்தான நிலைமைகளை ஏற்படுத்துமே தவிர, சாதகமான பலனை அளிக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment