சென்னை::விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் கடந்த 2ம் தேதி அன்று தேமுதிக சார்பாக ஊழல் எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் உரையாற்றினர். இந்நிலையில், மாநாட்டில் அவர்கள் பேசியது தொடர்பாக உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அதிமுக தொகுதி இணை செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், உளுந்தூர்பேட்டையில் நடந்த தேமுதிக மாநாட்டில் அந்த கட்சியின் எம்எல்ஏக்கள் அருட்செல்வன், பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்தும் தமிழக போலீஸ் மற்றும் போலீஸ் டிஜிபி குறித்தும் அவதூறாக பேசியுள்ளனர்.
அவர்கள் மீதும் அவர்களுக்கு தூண்டுதலாக இருந்த கட்சி தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் மீதும் தகுந்த பிரிவின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்‘ என கூறியுள்ளார். இந்த மனுவை உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முத்துராமன் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார். மேலும், இந்த வழக்கின் சாட்சிகளாக கூறப்பட்டுள்ள மாவட்ட கவுன்சிலர் கோதண்டபாணி மற்றும் அதிமுக நிர்வாகிகள் குணசேகரன், பூட்டோ, வெங்கடேசன், ஏழுமலை ஆகியோரை வரும் 11ம் தேதி அன்று விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment