Thursday, February 13, 2014
இலங்கை::சீன வெளிவிவகார அமைச்சர் திரு.வாங் யி இனது அழைப்பின் பேரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேடபிரதி நிதியாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் சீனாவின் பீஜிங் நகரில் அண்மையில் இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டார்.
கடந்த வருடம் சீன ஜனாதிபதி எஸ்ஐ ஜிங்பிங் க்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பின் போது இரு தரப்பு மூலோபாய உறவுகள் குறித்து உடன்பாடுகள் எட்டப்பட்டதாக வெளிவிவகார அமைச்சின் ஊடக அறிக்கை குறிப்பிடுகின்றது.
தன் போதுஅரசியல், பாதுகாப்பு,பொருளாதாரம் மற்றும் கலாச்சார விடயங்களில் இரு வெளி விவகார அமைச்சர்களும் கவனம் செலுத்தினர்.
நாட்டில் யுத்தம் முடிவுக்குக்கு வந்ததிலிருந்து இலங்கையில் நிலவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை சீன வெளிவிவகார அமைச்சர் புரிந்து கொள்வதாக தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் பொறிமுறையை மேலும் விருத்தி செய்ய அவர்கள் உடன்பாடு கண்டனர் என அவ்வூடக செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ததுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பில் இரு நாடுகளும் பயனடைந்ததையும் அவர்கள் நினைவு கூர்ந்தனர்.

No comments:
Post a Comment