Monday, February 24, 2014

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் முன்னாள் புலிகளுக்கு சுயதொழில் கடனுக்கான திறன்விருத்தி செயலமர்வு!

Monday, February 24, 2014
இலங்கை::புனர்வாழ்வு பெற்ற முன்னாள்  முன்னாள் புலிகளுக்கு கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்தோருக்கான சுயதொழில்

கடனுக்கான திறன்விருத்தி செயலமர்வு பிரதேச ரீதியாக எதிர்வரும் 25, 26, 27 ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளது .

 புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் நடத்தப்படும் இச் செயலமர்விற்கென அமைச்சின் உயர் அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வருகைதரவுள்ளதுடன் சுயதொழிலுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தவர்களிலிருந்து ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவிலிருந்தும் தலா நூறுபேர் வீதம் இதற்கென தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் .

 அத்துடன் இவர்கள் பெயர் விபரங்களை பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் புனர்வாழ்வு உத்தியோகத்தர் மு . கயோதரன் அறிவித்துள்ளார் .

 இதற்கமைய பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் எதிர்வரும் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் கரைச்சி , கண்டாவளை பிரதேச செயலகப் பிரிவில் 26 ஆம் திகதி புதன்கிழமையும் மாவட்ட செயலகத்திலும் பூநகரி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்தோருக்கு 27 ஆம் திகதி வியாழக்கிழமையும் இச் செயலமர்வுகள் நடைபெறவுள்ளன .

 

No comments:

Post a Comment