Friday, February 14, 2014
இலங்கை::நாட்டின் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர்
ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கில்
நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளில் இலங்கையின் நன்மதிப்பிற்கும் களங்கம் ஏற்படுத்தும் முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நன்மைகளை ஈட்டிக்கொள்ளவும், தங்களது சுய இருப்பிற்காகவும் இவ்வாறு சிலர் போலிப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த முயற்சிகளை முறியடிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க முனைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். சமாதானமும் ஐக்கியமும் நிறைந்த சுபீட்சமான இலங்கை கட்டியெழுப்பப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment