Saturday, February 8, 2014

யாழ். மாவட்டத்தில் மசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் விபச்சாரம்! விரைவில் நடவடிக்கை பொலிஸ்:யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன!

Saturday, February 08, 2014
இலங்கை::யாழ். மாவட்டத்தில் விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக நடைபெறும் மசாஜ் நிலையங்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.விமலசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடும் விடுதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு புலனாய்வு பிரிவினரால் விபரங்கள் சேகரிப்பட்டு வரும் அதேவேளை, குறித்த விடுதிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்தபு இடம்பெற்றது. இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் யாழ்ப்பாணத்தில் அதிலும் குறிப்பாக நல்லூர் ஆலயத்தினை அண்மித்ததாக இருக்கும் விடுதியில் மசாஜ் நிலையம் இயங்கி வருகின்றது.
மேலும், அங்கு விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் முகமான செயற்பாடுகள் பலவற்றிற்கு இடமும் வழங்கப்பட்டு வருகின்றது. இச் சம்பவங்கள் தொடர்பாக பொலிஸ் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்குப் பதிலளித்த எஸ்.எஸ்.பி, யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தினை நாங்கள் உட்பட அனைவரும் மதிக்கின்றோம். இதனால் அக்கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளை பொலிஸார் மேற்கொள்வது இல்லை. அவ்வாறான செயற்பாடுகள் பலவற்றினை நாங்கள் கடந்த காலங்களில் தடுத்து நிறுத்தியுள்ளோம்.

எனவே, இவ்வாறான மசாஜ் நிலையம் இயங்குகின்ற சம்பவம் தொடர்பாக பொலிஸாருடைய புலனாய்வு பிரிவினர் தற்போது தகவல்களை சேகரித்து வருவதுடன், விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கும் மற்றும் கலாசார சீரழிவுகளுக்கு இடமளிக்கும் விடுதிகள் தொடர்ந்து புலனாய்வு பிரிவினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

சேகரிக்கப்படும் தகவல்கள் உறுதிப்படுத்தும் நிலையில், உடனடி நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொள்வார்கள். மேற்படி குற்றத்தினை புரிந்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment