Monday, February 17, 2014

விமான பராமரிப்பு வளாகம்; கட்டுநாயக்கவில் இருந்து மத்தளவுக்கு இடம் மாறுகிறது!

Monday, February 17, 2014
இலங்கை::கட்டுநாயக்காவில் தற்போது தொழிற்படும் விமான பராமரிப்பு வளாகத்தை மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து துறை அமைச்சின் செயலாளர் ரவீந்திர ருபேரு தெரிவித்துள்ளார்.
 
மத்தல சர்வதேச விமான நிலையத்தில் பாரிய இடவசதி உள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அமைய அதிக அளவிலான சர்வதேச விமானங்கள் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல ஊக்குவிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இந்த மாற்றம் குறித்து சகல சர்வதேச விமான சேவைகளுக்கும் அறிவிக்கப்படவுள்ளதாகவும், இலங்கைக்கு வரும் சரக்கு விமானங்களையும் மத்தல சர்வதேச விமான நிலையத்தில் இறக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
அதுமட்டுமின்றி, மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் விமானங்களுக்கு விசேட சலுகையுடனான வசதிகளும் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், சுற்றுலாவினை மேற்கொண்டு இந்த விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு விசேட சலுகையுடன் கூடிய வசதிகள் அளிக்கப்படவுள்ளன.
 
அவர்கள் தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சுற்றுலா பிரதேசங்களுக்கு இலகுவான முறையில் செல்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment