Thursday, February 20, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என கியூபா அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட
உள்ள தீர்மானத்தை முறியடிக்கும் நோக்கில் இலங்கை அமைச்சர்களும்
ராஜதந்திரிகளும் நட்பு நாடுகள் நோக்கி படையெடுத்துள்ளனர்.
அந்த வகையில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தற்போது கியூபாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
கியூபா விஜயம் செய்துள்ள அமைச்சர் சுசிலிடம், அந்நாட்டு துணை ஜனாதிபதி மிகியுல் டயாஸ் கானெல் இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment