Sunday, February 09, 2014
இலங்கை:: தான் பிறந்து வளர்ந்த தாய் நாட்டைக் காட்டிக் கொடுப்பதானது தன் னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்ற தாயைக் காட்டிக் கொடுப்ப தற்குச் சமமானது. இத்தகைய மட்டகரமான செயலை செய்வதற்குச் சிலர் துணிந்துள்ளார்கள். இத்தகையவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என நினைக்கும்போதே அவர்கள் மீது ஒருவிதமான வெறுப்பு ஏற்படுகிறது. தமது அரசியல் இருப்பிற்காகவும், பிறநாட்டுக் கைக்கூலிகள் வழங்கும் அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் இவ்வாறு செய்யத் துணிந்தவர்களை எமது நாட்டுக் குடிமக்கள் என்று சொல்வதே பாவமான ஈனச்செயல்.
இலங்கை:: தான் பிறந்து வளர்ந்த தாய் நாட்டைக் காட்டிக் கொடுப்பதானது தன் னைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்ற தாயைக் காட்டிக் கொடுப்ப தற்குச் சமமானது. இத்தகைய மட்டகரமான செயலை செய்வதற்குச் சிலர் துணிந்துள்ளார்கள். இத்தகையவர்கள் இலங்கையில் இருக்கிறார்கள் என நினைக்கும்போதே அவர்கள் மீது ஒருவிதமான வெறுப்பு ஏற்படுகிறது. தமது அரசியல் இருப்பிற்காகவும், பிறநாட்டுக் கைக்கூலிகள் வழங்கும் அற்ப சொற்ப சலுகைகளுக்காகவும் இவ்வாறு செய்யத் துணிந்தவர்களை எமது நாட்டுக் குடிமக்கள் என்று சொல்வதே பாவமான ஈனச்செயல்.
முப்பது வருட கால கொடிய யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்து உலக நாடுகள்
சகலவற்றுக்குமே முன்னுதாரணமாகத் திகழும் இலங்கைக்கு இலங்கையிலிருந்து கொண்டே துரோகம்
செய்வதற்குச் சிலர் ஆயத்தமாகி வருகின்றனர். மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள
மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத் தொடரில் இலங்கையை எப்படியாவது சிக்கவைக்க வேண்டும்
எனச் சிலர் கங்கணம் கட்டிச் செயற்பட்டு வருவது தெளிவாகப் புலனாகிறது.
இந்தச் செயற்பாட்டின் மூலமாக இந்த அரசாங்கத்தைப் பழிவாங்கி விடலாம் என்பதே இவர்களது
குறுகிய நோக்கமாகவுள்ளது. உலக நாடுகளிலுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல்களை அந்நாட்டு
அரசாங்கங்கள் முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் எனக் கூறிச் செயற்பட்ட அமெரிக்கா இன்று
அவ்விடயத்தில் வெற்றி கண்ட நாடான இலங்கை மீது கேள்விக் கணைகளைத் தொடுக்கிறது. இது
எந்த வகையில் நியாயம்?
புலிபயங்கரவாதத்தை அழித்தொழிக்குமாறு கூறியதுடன் மட்டும் நின்று விடாது அதற்கான
உதவிகளையும் வழங்கி யுத்தத்தை முடிவிற்குக் கொண் டுவர ஒத்துழைத்த அமெரிக்கா இன்று
தனது நிலைப்பாட்டை தலைகீழாக மாற்றியதன் மர்மம் என்ன என்பது புரியாத புதிராகவே உள்ளது.
ஒரு வேளை உலக நாடுகளுக்கே தலைமை தாங்குவதாக கர்வம் கொள்ளும் அமெரிக்கா வெற்றி என்பது
தனக்கு மட்டும் தான் என கருதுகிறதோ தெரியவில்லை. அதனால் இலங்கை அடைந்த வெற்றியைப்
பொறுத்துக் கொள்ள முடியவில்லைப்போலும்.
இலங்கை அரசாங்கத்தினால் அல்லது இலங்கை இராணுவத்தினரால் யுத்தத்தில் புலிகளை அழிக்க
முடியாது போகும். இலங்கை அமெரிக்கா விடம் உதவி கேட்கும், அவ்வேளையில் தாம் வந்து
புலிகளை அழித் தொழித்து அந்த வெற்றியின் உரிமையைத் தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே
உண்மையில் அமெரிக்காவின் திட்டமாக இருந்திருக்க வேண் டும். ஆனால் எமது படையினர்
வெற்றி இலக்கை அடைந்ததும் அமெரிக் காவினால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனை
இப்போது மனித உரிமை மீறலாகக் கூறி திசை திருப்பப் பார்க்கிறது.
உண்மையில் பாகிஸ்தான் நாட்டு இராணுவமே பின்லேடனின் இருப் பிடத்தைக் கண்டுபிடித்துச்
சுட்டுக் கொன்றது. ஆனால் ஆங்கிலத் திரைப்படங்களில் வருவது போன்று ஓர் ஏற்பாட்டை
நடத்தி இறந்த உடலுக்கு அமெரிக்கப் படைகள் உரிமை கொண்டாடின. உலக அரங்கில் தம்மை மீறி
எவரும் பெயர் எடுத்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மிகத்
தீவிரமாகவும், அவதானமாகவும் உள்ளது.
இதனைப் புரிந்து கொள்ளாத எமது நாட்டிலுள்ள சிலர் அமெரிக்காவின் இராஜதந்திர கபட
நாடகத்திற்குப் பலியாகி தமது தாய் நாட்டையே காட்டிக் கொடுத்து வருகின்றனர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தம் நடைபெற்றதையும், அவர்கள் அடியோடு
அழிக்கப்பட்டதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், செயலாளர்
மாவை சேனாதிராசா உட்படச் சகலருமே விரும்பினார்கள், வரவேற்றார்கள். அந்தளவிற்கு
அவர்களுக்கும் புலிகளினால் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வந்தன. ஆனால் இன்று தமது
அரசியல் இருப்பிற்காக அவர்கள் வேறு மாதிரியாகச் செயற்படுகிறார்கள்.
அமெரிக்காவினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் செயற்பாடுகள் நூறு வீதம் ஒத்த
கருத்துக்களையே கொண்டுள்ளன. உலக அரங்கில் தம்மை யாரும் மிஞ்சிவிடக் கூடாது என்பதில்
அமெரிக்கா கவனமாக இருப்பது போலவே தமிழ்க் கூட்டமைப்பும் உள்நாட்டில் இனப் பிரச்சினை
தீர்வு விடயத்தில் தம்மை யாரும் மிஞ்சி விடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளது.
அதனாலேயே இருதரப்பிற்கும் ஒத்துப் போகும் நிலையும் காணப்படுகிறது. இல்லாவிடின்
அமெரிக்க ஜனாதிபதியுடன் உலகிலுள்ள வல்லரசு நாடுகள் குறித்து இராஜதந்திர மந்திராலோசனை
நடத்தும் இராஜதந்திரிகள் வடக்கிற்குச் சென்று அனந்தி போன்றவர்களைச் சந்தித்துரையாடி
தமது பக்க பொய் நியாயத்திற்கு வலுச் சேர்ப்பார்களா?
ஈராக்கில், ஆப்கானிஸ்தானில்,
சிரியாவில் குண்டுகள் போட்டு அந்நா டுகளைச் சின்னாபின்னமாக்கி அப்பாவி மக்களைத் தனது
நாட்டுப் படை கள் மூலம் கதறக் கதறக் கொன்று குவித்துவரும் அமெரிக்கா எமது நாட்டில்
பயங்கரவாத அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்காக இன்று நீலிக் கண்ணீர்
வடிக்கிறது. அதற்கு நாட்டிலுள்ள சிலர் எமது தாய் நாட்டைக் காட்டிக் கொடுக்கத்
துணிந்துவிட்டார்கள். இவர்களை மன்னிக்க முடியாது. இவர்கள் தெரிந்து கொண்டே
தேசத்துரோகச் செயலில் ஈடுபடுகிறார்கள்.
தாய் நாட்டைக் காட்டிக் கொடுப்பதானது பெற்ற தாயை காட்டிக் கொடுப்
தாய் நாட்டைக் காட்டிக் கொடுப்பதானது பெற்ற தாயை காட்டிக் கொடுப்
பதற்கு சமன்
என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இனியும் இவர்கள் இதனை உணர்ந்து
கொள்ளாவிடின் இப்பூமியில் வாழத் தகுதி யற்றவர்களாகிவிடுவர். எமக்கிடையே என்னதான்
கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தாய் நாட்டிற்கு ஓர் அபகீர்த்தி என்றால் அதனைத்
தடுத்து தட்டிக் கேட்க ஒவ்வொரு குடிமகனும் நான் முதல் நீ முதல் என்பதாக முன்
வரவேண்டும். அதுவே பெற்ற தாய்க்கும், பிறந்த நாட்டிற்கும் செய்யும் மரியாதையாகும்.


No comments:
Post a Comment