Monday, February 10, 2014
இலங்கை::காணி அமைச்சின் மாவட்ட காணி ஆணையகம், யாழ்ப்பாணத்தில் காணி அமைச்சர் ஜனக தென்னக்கோனால் இன்று காலை புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை::காணி அமைச்சின் மாவட்ட காணி ஆணையகம், யாழ்ப்பாணத்தில் காணி அமைச்சர் ஜனக தென்னக்கோனால் இன்று காலை புதிதாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட காணி அமைச்சர் தலைமையிலான குழுவினர், காணி ஆணையகம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களிற்கு விஜயம் மேற்கொண்டதுடன், பலரையும் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றார்.
இதன் பின்னர் முதலாவதாக யாழ். மாவட்டச் செயலகத்திற்கு அருகிலுள்ள பழைய புங்காலி புதிதாக அமைப்பப்பட்ட காணி ஆணையகத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாகாண ஆளுநர் சந்திரசிறி மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் உயர்மட்டக் கலந்துரையாடலிலும் ஈடுபட்டு வருகின்றார். இதனையடுத்து பல இடங்களிற்கும் செல்லவுள்ளதாகவும் தெரிய வருகின்றது.







No comments:
Post a Comment