Tuesday, February 04, 2014
இலங்கை::தேசிய சுதந்திர தினம் மற்றும் சர்வதேச புற்றுநோய் தினம் ஆகியவற்றினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் தேசிய சுதந்திர தினம் மற்றும் சர்வதேச புற்றுநோய் தினத்தினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன.
களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கு.சுகுணன் தலைமையில் இன்று காலை தேசிய கொடியேற்றப்பட்டு சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
அதனைத்தொடர்ந்து சர்வதேச புற்றுநோய் தினத்தினை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதனையொட்டு வைத்தியசாலையில் இருந்து புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் பவனியாக சென்றதுடன் புற்றுநோய் தொடர்பிலான துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இலங்கையில் அதிகளவு புற்றுநோயாளர்களைக்கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் பட்டியல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றின் தன்மை தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையில் வைத்தியசாலையின் தாதியர்கள்,ஊழியர்கள்,வைத்தியர்கள்,வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர்,பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது புற்றுநோய் தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் வகையில் ஒலிபெருக்கிமூலம் கருத்துரைகளும் வழங்கப்பட்டன.

No comments:
Post a Comment