Sunday, February 16, 2014
இலங்கை::வடக்குத் தமிழ் தரப்பும் அரசாங்கமும் பேச்சுவார் த்தைகளை ஆரம்பித்து அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த விடயங்களில் விரைவாக அவதானம் செலுத்துவதே தற்போது மேற்கொள்ளப்படவேண்டிய விடயமாகவுள்ளது. எனவே எதிர்வரும் ஆறு வாரங்களுக்குள் அரசாங்கத் தரப்பும் தமிழ்த் தரப்பும் விரைவாக கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.
இவ்வாறு அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாக
இணக்கப்பாட்டுக்கு சென்றால் மட்டுமே இந்தியாவின் ஆதரவை நாம் பெற
முடியும். அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையும் அழுத்தங்களை கைவிடும். எந்த
விதத்தில் பேசுவது என்று சிந்திக்காமல் பேச்சை ஆரம்பிக்கவேண்டும்
என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா
வாக்களிக்கத் தீர்மானித்தால் அது இலங்கைக்கு பாரிய பாதகமாக
இருக்கும். பல்வேறு நாடுகளின் தீர்மானம் இந்தியாவின் தீர்மானத்தில்
தங்கியிருக்கும் என்றும் அவர் கூறினார். எதிர்வரும் ஜெனிவா மனித
உரிமைக் கூட்டத் தொடர் அமர்வுகள் மற்றும் இலங்கை தொடர்பில்
கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படும் பிரேரணை குறித்து
விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.
மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரட்ன இந்த
விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் ஜெனிவா மனித உரிமைப்
பேரவையில் இந்தியாவின் ஆதரவை எம்மால் பெற முடியுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது. காரணம் இந்தியாவினால் இலங்கைக்கு உதவி செய்ய முடியாத
நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானம்
எடுக்குமாயின் அது எமக்கு பாதகமான நிலைமையை உருவாக்கும். காரணம்
பல்வேறு நாடுகளின் தீர்மானம் இந்தியாவின் தீர்மானத்தில்
தங்கியிருக்கின்றது என்று கூறலாம். இதேவேளை இந்தியாவின் ஆதரவை
பெறவேண்டுமானால் அரசாங்கமும் வடக்குத் தமிழ் மக்களும்
கலந்துரையாடல்களில் ஈடுபட்டு ஒரு இணக்கப்பாட்டுக்கு
வரவேண்டியது அவசியமாகும். குறிப்பாக அரசியல் தீர்வு மற்றும்
அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கமும் வடக்குத்
தரப்பும் பிரவேசம் ஒன்றுக்கு வரவேண்டியது அவசியமாகும்.
வடக்குத் தமிழ் தரப்பும் அரசாங்கமும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்து
அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்த விடயங்களில் விரைவாக
அவதானம் செலுத்துவதே தற்போது மேற்கொள்ளப்படவேண்டிய
விடயமாகவுள்ளது. இதனை முதலில் ஆரம்பிக்கவேண்டும். எதிர்வரும் ஆறு
வாரங்களுக்குள் அரசா ங்கத் தரப்பும் தமிழ்த் தரப்பும் விரைவாக
கலந்துரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் . காரணம் ஆறு வாரங்களுக்குள்
வடக்குத் தரப்பும் அரசாங்கமும் இணைந்து பேச்சுக்களை நடத்தி ஒரு
பிரவேசம் ஒன்றுக்கு வரவேண்டியது அவசியமாகும்.
காரணம் மூன்றாவது முறையாகவும் ஜெனிவாவில் இலங்கை தொடர்பில்
பிரேரணையை நிறைவேற்ற விடாமல் அதனை எவ்வாறாவது தடுப்பது அவசியமாகும்
என்றார்.
No comments:
Post a Comment