Saturday, February 15, 2014

நாடுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை இலங்கை ஏற்றுக்கொள்ளாது: அமைச்சர் டிலான் பெரேரா!

Saturday, February 15, 2014
இலங்கை::நாடுகளின் அடிப்படையிலான தீர்மானங்களை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
குறுகிய அரசியல் லாபங்களின் அடிப்படையில் நாடுகளுக்கு எதிரான தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்க எதிரான நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
மனித உரிமை விவகாரத்தைப் பயன்படுத்தி இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க சில தரப்பினர் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டிலான் பெரேரா தற்போது நமிபீயாவிற்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறிமுறைமையை இலங்கை மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment