Tuesday, February 18, 2014
ராமேஸ்வரம்:இலங்கையில் நடக்கவுள்ள பேச்சு வார்த்தைக்கு, ராமேஸ்வரம்,
மண்டபத்தில் மீன்பிடிப்பு நிறுத்தியதால், மீனவர்கள் வேலை தேடி வெளியூருக்கு
செல்லும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இந்திய, இலங்கை மீனவர்கள்
சுமுகமாக மீன் பிடிக்கவும், இரு நாட்டு சிறையில் வாடும் மீனவர்களை
விடுவிக்க, சென்னையில் ஜன., 27ல், தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சு வார்த்தை
நடந்தது.
இந்நிலையில், இலங்கையில் நடக்கவுள்ள 2ம் கட்ட பேச்சு
வார்த்தைக்காக, பிப்., 15ம் தேதி முதல் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன்
விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல், படகுகளை கரையில்
நிறுத்தியுள்ளனர். இதனால், கடலோர பகுதியில் இருந்த ஐஸ் பேக்டரி, லேத்,
பட்டறை, டீ கடை, ஓட்டல்கள் மூடப்பட்டு, மீனவர்கள் நடமாட்டம் இன்றி, வெறிச்
சோடி கிடக்கிறது. மீனவர்களும் வேலையின்றி வீட்டில்
முடங்கியதால், அன்றாட செலவுக்கு மீனவ குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர்.
முடங்கியதால், அன்றாட செலவுக்கு மீனவ குடும்பத்தினர் பரிதவிக்கின்றனர்.
வேலை தேடி
மீனவர்கள்: மீன்பிடிப்பு நிறுத்தம் 25 நாள்கள் வரை நீடிக்கும் என்பதால்,
குடும்பத்தினர் உணவு, இதர செலவுக்கு மீனவர்கள், வேலைக்கு செல்ல வேண்டிய
கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால், இரு நாட்களாக ராமேஸ்வம், தங்கச்சிமடம்,
பாம்பனை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை தேடி,
கன்னியாகுமரி, கேரளாவுக்கு சென்றுள்ளனர்.

No comments:
Post a Comment