Friday, February 21, 2014
இலங்கை::இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானது என அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கு உலக சமூகத்தின் ஒத்துழைப்பு முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இலங்கையின் மைந்தர்களுக்கு ஓர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நாடு நெருக்கடிகளை எதிர்நேர்ககியிருக்கும் இந்த தருணத்தில் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் இலங்கை மைந்தர்களின் ஒத்துழைப்பு நாட்டுக்கு அவசியமாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட அமெரிக்கர்கள் நாடு தொடர்பிலான சரியான விளக்கத்தை ஏனையோருக்கு தெளிவுபடுத்த வேண்டியது அவசியமாகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்து வரும் ஒவ்வொரு இலங்கையரும், நாட்டின் நன்மதிப்பு தூதுவர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாதம் காரணமாக பல முக்கியமான அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக வாழ்வதற்கான உரிமை கூட மக்களுக்கு கிடைக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் மேலும் வலுப்படுத்த வேண்டியதே தற்போதைய பிரதான இலக்காக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
அமைதியானதும், சுபீட்சமானதுமான இலங்கையை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தினதும் நாட்டு மக்களினதும் தெளிவான நோக்கமாக அமைந்துள்ளது என ஜாலிய விக்ரமசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment