Tuesday, February 11, 2014
இலங்கை::அக்கராயன் பகுதியில் கமநலசேவை நிலையம் அமைப்பதற்காக 9மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார். ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக கமநல அபிவிருத்தி அமைச்சினூடாக இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயக் கேந்திர பிரதேசங்களில் கமநலசேவை நிலையங்கள் அமையப் பெறவேண்டும் என்பதனை சுட்டிக்காட்டி வரும் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் அவர்கள், அக்கராயன் மற்றும் பளை ஆகிய பிரதேசங்களில் அந்நிலையங்கள் இதுவரை அமைக்கப்படவில்லை என்பதையும் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அதன் அடிப்படையில் கடந்த 02.02.2014 அன்று முழங்காவிலில் திருத்தி அமைக்கப்பட்ட கமநலசேவை நிலையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்துகொண்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பிரதியமைச்சர் சந்திரசேன அவர்களிடம் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான மு.சந்திரகுமார் அவர்கள் அக்கராயன் பகுதியில் கமநலசேவை கட்டிடத்தின் அவசியம் குறித்து தெரிவித்ததோடு அதற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.
அதற்கமைவாக கமநல அபிவிருத்தி அமைச்சினூடாக சுமார் ஒன்பது மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிதியமைச்சர் சந்திரசேன தெரிவித்துள்ளார். இந்நிதியினூடாக துரிதகதியில் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

No comments:
Post a Comment