Wednesday, February 05, 2014
இலங்கை::வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் 66வது சுதந்திர தின நிகழ்வுகள் ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் தலைமையில் நேற்று இடம்பெற்றது.
ஆளுநரின் செயலாளர் தேசியக் கொடியினையும், ஆளுநரின் உதவிச் செயலாளர் திரு. ஜே.எக்ஸ்.செல்வநாயகம் வட மாகாணக் கொடியியையும் ஏற்றினார்கள். அதனைத் தொடர்ந்து ஆளுநரின் செயலாளர் உரையாற்றி சுதந்திரதின வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டார்.
யாழ் மாவட்ட பிராந்திய ஆணையாள அலுவலக உதவிச் செயலாளர் அண்ணாத்துரை, ஆளுநரின் இணைப்புச் செயலாளர் மேஜர் சரத் அரனியல், ஆளுநர் செயலக கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.





No comments:
Post a Comment