Thursday, February 6, 2014

கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 54 இலங்கையர் நாடு கடத்தல்!

Thursday, February 06, 2014
இலங்கை::படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற நிலையில், அந்நாட்டு அரசாங்கத்தால் கிறிஸ்மஸ் தீவிலுள்ள திறந்தவெளி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 54 பேர் இன்று வியாழக்கிழமை நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
 
சுமார் ஒரு வருட காலமாக குறித்த சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 54 பேரே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில், தனிப்பட்ட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டனர் என்று ஆஸ்திரேலியாவிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இவர்கள், இன்றைய தினம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர் என்று முன்கூட்டியே அறிவிக்காத நிலையில், இன்று அதிகாலை திடீரென திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பலர்,  புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறாக மேலும் பல இலங்கையர்களை நாடு கடத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அச்செய்திகள்

No comments:

Post a Comment