Wednesday, February 26, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் 3000பேருக்கு காணி உறுதிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன –மீள்குடியேற்ற பிரதியமைச்சர் வி.முரளிதரன்!

Wednesday, February 26, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் குடியமர்த்தப்பட்டு இதுவரையில் காணி உறுதிகள் பெறாதவர்களுக்கு அவற்றிக்கான உறுதிகளைப்பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுக்கப்பட்டுவருவதாக
மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் 3000பேருக்கு ஜயபூமி காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலும் 7000 பேருக்கு அவற்றினை பெற்றுக்கொடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மண்முனைப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட புதுக்குடியிருப்பு,கிராண்குளம் ஆகிய பகுதிகளில் குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு காணி உறுதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1994ஆம் ஆண்டு குடியேற்றம் செய்யப்பட்டவர்களுக்கு இதுவரையில் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படாமை தொடர்பில் பிரதியமைச்சரின் கவனத்துக்கு கொண்டுசென்றதை தொடர்ந்து இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளர் விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது இதுவரையில் காணி உறுதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாதவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த பிரதியமைச்சர் அவர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்களைபெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,வர்த்தகர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment