Thursday, February 13, 2014
ராமேசுவரம்::ராமேசுவரம், பாம்பன், மண்டபத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மீனவர்கள், 800 விசைப் படகுகளில் நேற்று மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவில்
மீன்வளம் நிறைந்து காணப்படும் கச்சத்தீவு அருகே ராமேசுவரம், மண்டபத்தை
சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர்
ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் படகுகளில் ஏறி சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்க வரக்கூடாது. அவ்வாறு வந்தால் படகுகளுடன் சிறை பிடித்து செல்வோம் என்று மீனவர்களை எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் படகுகளில் ஏறி சர்வதேச கடல் எல்லையில் மீன்பிடிக்க வரக்கூடாது. அவ்வாறு வந்தால் படகுகளுடன் சிறை பிடித்து செல்வோம் என்று மீனவர்களை எச்சரித்தனர்.
இதனை தொடர்ந்து கடல் எல்லையை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி ராமேசுவரம்,
பாம்பன், மண்டபத்தை சேர்ந்த 29 மீனவர்களையும், 7 விசைப் படகுகளையும்
சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன்
துறைமுகத்தில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பியவர்கள் இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவலை கடலோர காவல் படையினரிடம் தெரிவித்தனர்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரிடம் இருந்து தப்பியவர்கள் இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட தகவலை கடலோர காவல் படையினரிடம் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment