Monday, February 10, 2014

எழும்பூர் புத்தமடத்தில் இருந்த 24 இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்பினர்!

Monday, February 10, 2014
சென்னை::இந்திய கடல் எல்லை பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் மீன்பிடித்த 24 இலங்கை மீனவர்களை கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.
 
இந்தியா– இலங்கை அரசின் பேச்சுவார்த்தைபடி கைது செய்யப்பட்ட இருநாட்டு மீனவர்களும் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகிறார்கள்.
 
இதையடுத்து புழல் ஜெயிலில் இருந்த 24 இலங்கை மீனவர்களும் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டு எழும்பூரில் உள்ள புத்தமடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
 
இந்த நிலையில் இன்று மதியம் 24 மீனவர் களும் சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு புறப்பட்டனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 6 படகுகளும் ஒப்படைக்கப்பட்டது. அதில் அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
 
அவர்களுடன் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் ரோந்து கப்பலில் இந்திய எல்லை வரை செல்கிறார்கள்.

No comments:

Post a Comment