Friday, January 3, 2014

மன்னார் தாழ்வுபாட்டு கடற்பரப்பில் வைத்து பத்து இந்திய மீனவர்கள் கைது!

Friday, January 03, 2014
இலங்கை::இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராமநாதபுரம் மாவட்டம் தங்கட்சி மடம் கிராமத்தைச் சேர்ந்த 10 மீனவர்களை நேற்று வியாழக்கிழமை மாலை தாழ்வுப்பாடு கடற்பரப்பில் வைத்து கைதுசெய்த கடற்படையினர் குறித்த மீனவர்களை தங்களிடம் கையளித்துள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார்.

குறித்த 10 மீனவர்களும் இரண்டு இழுவைப்படகுகளில் தாழ்வுப்பாட்டு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின் கடற்படையினர் உடனடியாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் வி.எஸ். மெராண்டா உட்பட நான்கு கடற்தொழில் பரிசோதகர்கள் தாழ்வுப்பாட்டு கடற்படை முகாமிற்குச் சென்று குறித்த மீனவர்களை மீட்டனர்.

இதேவேளை, நேற்று இரவு 12 மணியளவில் குறித்த மீனவர்கள் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை மீண்டும் மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா வினால் பெறுப்பேற்கப்பட்டனர்.

குறித்த மீனவர்கள் தற்போது மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 10 மீனவர்களிடமும் முழுமையான வாக்கு மூலம் பதிவு செய்து கொள்ளப்பட்டதன் பின் அவர்கள் நேரடியாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment