Saturday, January 25, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு நூறு ஆலயங்களை புனரமைப்பதற்கான நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
குடந்த ஆண்டு 138 ஆலயங்கள் ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் இந்த ஆண்டு மேலும் 100 ஆலயங்களை புனரமைக்க நிதியொதுக்கீடுகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திவிநெகு திட்டம் திணைக்களமாக மாற்றப்பட்டதன் பின்னர் முதன்முறையாக மாபெரும் பொங்கல் விழாவை மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெல்லாவெளியில் நடத்தியது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் சமுர்த்தி அதிகாரசபையும் இணைந்து இந்த மாவட்ட திவிநெகு பொங்கல் நிகழ்வினை நேற்று வெல்லாவெளி முத்துமாரியம்மன் ஆலய முன்றிலில் நடைபெற்றது.
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் வில்வரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சுpறப்பு அதிதியாக சமுர்த்தி அதிகாரசபையின் பிரதிப்பணிப்பாளர் குணரெட்னம்,மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன்,பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பேரின்பமலர் மனோராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பொங்கல் பொங்கப்பட்டு விசேட நிகழ்வுகள் நடைபெற்றதுடன் ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் ஆசிவேண்டி விசேட பூசைகளும் நடத்தப்பட்டது.
அத்துடன் சமுர்த்தி உதவிபெறும் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் கிராமிய கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்டன.

No comments:
Post a Comment