Saturday, January 4, 2014
இலங்கை::யுத்தகாலத்தில் காணாமல் போனவர்கள் தொடர் பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு புது வருடத்தில் தனது பணிகளை ஆரம்பித்தது.9/8, சுரநிமல பிளேஸ், கொழும்பு 6 என்ற விலாசத் தில் அமைந்துள்ள ஆணைக்குழுவின் அலுவலகத் தில் இடம்பெற்ற நிகழ்வில் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் நீதிபதி மக்செல் பராக்கிரம பரணகம, தேசியக் கொடியை ஏற்றிவைத்ததுடன் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மத்தியில் உரைநிகழ்த்தினார்.
அங்கு உரையாற்றிய ஆணைக் குழுவின் தலைவர், விசாரணைகள் பூர்த்தியடைந் ததும் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். 30 வருட யுத்த காலத்தில் 11,000 சிவில் மற்றும் பாதுகாப்புப் படையினர் காணாமல் போயுள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கிலிருந்து பல முறைப் பாடுகளைப் பெற்றுள்ளோம்.ஜனவரி 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் அமர்வுகள் கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெறவுள்ளது என்றும் அவர் கூறினார்.
புது வருடத்தில் பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களான குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரியந்தி சுரஞ்சனா வித்யாரட்ன மற்றும் மனோஹரி ராமநாதன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:
Post a Comment