Saturday, January 4, 2014
இலங்கை::மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைமுனை பகுதியில் உள்ள பள்ளிவாயலின் உண்டியலை உடைத்துகொள்ளையிட முயன்ற ஒருவரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.00மணியளவில் கோட்டைமுனை வாவிக்கரை அருகில் உள்ள அவுலியா பள்ளிவாயலின் உண்டியலையே இவ்வாறு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுக்கொண்டிருந்தபோது ஒருவர் மடக்கிப்பிடிக்கப்பட்டுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை என்பதனால் பள்ளிவாயல் தொழுகைக்கு பின்னர் அனைவரும் கலைந்து சென்ற பின்னர் ஒருவர் இரும்பு உழிகொண்டு உண்டியலை உடைத்து கொள்ளையிட்டு பணத்தினை பைகளுக்குள் இட்டுக்கொண்டிருந்தபோது பள்ளிவாயலில் கடமையாற்றும் ஒருவர் கண்டு இவரை மடக்கிப்பிடித்துள்ளார்.
இவ்வாறு பிடிக்கப்பட்டவர் காத்தான்குடி பிரதேசத்தினை சேர்ந்தவர் எனவும் அவர் ஏற்கனவே குற்றம் புரிந்து சிறைத்தண்டனை பெற்றவர் எனவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
மக்களினால் பிடிக்கப்பட்டவரை அப்பகுதிக்கு வந்த மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்து அழைத்துச்சென்றதுடன் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்கள் பள்ளிவாயல்களில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment