Sunday, January 5, 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் மற்றும் மகளிருக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில் புதிய விசேட திட்டம்!

Sunday, 05, January, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக அதிகரித்துச்செல்லும் வன்முறையினை தடுக்கும் வகையில் புதிய விசேட செயற்றிட்டம் ஒன்று நேற்று ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாதர் அமைப்புகளுடன் இணைந்த இதற்கான நடவடிக்கையினை பொலிஸ் திணைக்களத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவு மேற்கொண்டுவருகின்றது.

இதன் கீழ் சிறுவர்களை பாதுகாத்தல் மற்றும் மகளிர் பாதுகாப்பு தொடர்பிலான அறிவுறுத்தும் விசேட நிகழ்வு கல்லடி உப்போடை துளசி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட மாதர் அபிவிருத்தி சங்கத்தின் தலைவி திருமதி செல்வி மனோகர் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் நிலங்கா மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துச்செல்லும் சிறுவர்களுக்கு எதிரான வன்முனையினை கட்டுப்படுத்தி அவர்களை சமூகத்தில் பாதுகாப்பான வாழ்வினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் இந்த விழிப்புணர்வுகள் நடத்தப்படுவதாக சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்.

இதன் ஒரு படியாக பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்கள் மூலமாக தமது பிள்ளைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment