Wednesday, January 1, 2014

நாட்டுப் பிரஜைகளின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கான முழுமையான இயலுமை இலங்கையிடம் உள்ளது: ஜீ எல் பீரிஸ்!

Wednesday, January 01, 2014
இலங்கை::தனது நாட்டு மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள பணிகளை பொறுப்பேற்கவும் இலங்கை முழுமையான இயலுமையுடன் உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டை மீளக் கட்டியெழுப்பவும் எமது பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும் எல்லோருக்கும் அவர்கள் எந்த மதத்தினராக இருந்தாலும் எந்த இனத்தவராக இருந்தாலும் அல்லது எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை உறுதிசெய்வதற்கான வளங்களும் நிறுவனங்களும் அதற்கான மனோதிடமும் எங்களிடம் உள்ளது என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பிரென்ஸா லெடினா செய்திஸ்தாபனத்துக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பிரிவினைவாத புலிகளுக்கு எதிரான போர் நிறைவுக்கு வந்ததிலிருந்து நான்கு வருட குறுகிய காலப்பகுதிக்குள் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. எமது நாட்டில் நீங்கள் எங்கு சென்றாலும் முன்னேற்றத்தின் அடையாளங்களை காணமுடியூம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 30 வருட போரினால் ஏற்பட்ட சிக்கலான நிலைமைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சுமார் 300 பணிகளில் முன்னுரிமைப்படுத்தல்களை செய்யவேண்டியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் வடபகுதியில் முழுமையாக கன்னி வெடிகள் அகற்றப்பட்டுள்ளன. 11000 க்கும் மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு சம உரிமைகளுடன் சமூகத்தில் மீள் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment