Sunday, January 5, 2014

ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இன்று அந்த நாட்டின் இரண்டாம் அப்துல்லா ஹுசைன் மன்னருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை!

Sunday, 05, January, 2014
இலங்கை::மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயம் மேற்கொண்டு நேற்று மாலை ஜேர்தான் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு குயீன் ஆலியா சர்வதேச விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

ஜேர்தான் வெளிவிவகார அமைச்சின் பதில் இயக்குநர் நாயகம் முகம்மது தைசி்ர், அமைச்சின் ஆசிய திணைக்கள இயக்குநர் சுகைர் என்சுக் ஆகியோர் ஜனாதிபதி குழுவினரை வரவேற்றனர்.

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் விமான நிலையம் வந்திருந்தனர். அவர்களின் சிறுவர்கள் ஜனாதிபதிக்கும் அவரது பாரியாருக்கும் மலர்ச் செண்டுகள் வழங்கி வரவேற்றனர்.

ஜனாதிபதி ஜோர்தானில் இரண்டு தினங்கள் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தானுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இன்று அந்த நாட்டின் இரண்டாம் அப்துல்லா ஹுசைன் மன்னருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.
.
ஜோ்தானின் அம்மானிலுள்ள குயீன் அலியா விமான நிலையத்தை சென்றடைந்த ஜனாதிபதியை, ஜோர்தான் வெளிவிவகார அமைச்சின் பதில் செயலாளர் மொஹமட் தயஸர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

ஜோர்தானுக்கான இலங்கை தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் அங்கு வாழும் இலங்கை பிரஜைகளும் சிலரும் ஜனாதிபதியை வரவேற்பதற்காக குவீன் அலியா விமான நிலையத்தில் கூடியிருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment