Monday, January 6, 2014

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதிகேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த!

Monday, January 06, 2014
இலங்கை::கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதிகேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் திஸ்ஸ கரலியத்த.
 
பெண்கள் சிறுவர்களின், நலன்கள், பாதுகாப்பு அவர்களின் உரிமைகள் தொடர்பில் வடக்கு கிழக்கு பெரும் சவால்களை எதிர்கொள்ளும் பிராந்தியமாக காணப்படுகிறது என  பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற வட மாகாணத்தில் பெண்கள் சிறுவர்கள் அபிவிருத்தி பிரிவை உருவாக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில்  பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பில் ஊடகங்களில் வெளிவருகின்ற செய்திகள் கவலையளிப்பதற்காகவே உள்ளது இந்த நிலைமையை தொடர்ந்தும் வைத்திருக்க முடியாது யுத்தத்தினால் அதிகம் பாதிப்புக்களை சந்தித்தவர்கள் வன்னியிலுள்ள பெண்களும் சிறுவர்களுமே எனவே அவர்களின் நலன்களில் அதிக அக்கறை எடுத்து செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் அந்த வகையில் சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு இந்த பிரதேசங்களில் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது குறிப்பாக கிளிநொச்சியில் உள்ள நான்கு பிரதேசசெயலக பிரிவுகளிலும் சிறுவர் மறும் பெண்கள் பிரிவினை அனைத்து அடிப்படை வசதிகளுடனும் உருவாக்கியுள்ளது இது வடக்கில் கிளிநொச்சியிலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது இதற்காக அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அவர்களுக்கு மாவட்ட மக்கள் சார்பாக நன்றிகளை கூற கடமைபட்டுள்ளேன். எனத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்

கிளிநொச்சியில் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறுது. இது கிளிநொச்சியின் சனத்தொகையின் விகிதாசார ரீதியில் மிகவும் அதிகமானதே இந்த குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தங்களின் நாளாந்த வாழ்கையில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர் வாழ்வாதார ரீதியாகவும் தங்களின் பாதுகாப்பு தொடர்பிலும் சவால்களுடன் காணப்படுகின்றனர். மேலும் பல சிறுவர்கள் குடும்ப பொறுப்பை சுமந்து சிறவர் தொழிலாளியாக மாறியிருக்கின்றனர் எனவே இவர்களின் நலன்கள், பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் அக்கறை எடுத்து செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கும்,அவர்களின் நலனக்களை மேம்படுத்துவதற்குமான நடவடிக்கைகள் தனியே பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவினரால் மட்டும் மேற்கொள்ள முடியாது இது ஒரு கூட்டு செயற்பாடாகவே முன்னெடுக்கப்படல்வேண்டும் இங்கே எல்லா அரச உத்தியோகத்தர்கள்,பொலீஸ் திணைக்களம் மக்கள் அமைப்புகள் என அனைவரும் பங்காளிகளாக மாறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்

இன்றைய நிகழ்வின் போது வட மாகாணத்திலுள்ள 23 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள பெண்கள் சிறுவர்கள் பிரிவுக்கு கணணிகளும் வழங்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர்திருமதி ரூபவதிகேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த, அமைச்சின் செயலாளர் எரிக் இளையப்பராச்சி,அதன் மேலதிக செயலாளர் திருமதி அளவத்த, கெயார் சர்வதேச நிறுவனத்தின் திட்ட ஆலோசகர் கெலிம் எரிக்சன், கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் சேனாதிபதி சில்வா, கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரச அதிபர் சிறிணிவாசன்,பிரதேச செயலாளர்கள் வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களின் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment