Sunday, January 5, 2014

யாழில் பொலிஸ் நிலையங்களில் தமிழ் மொழி இனிமேல் கட்டாயம்:யாழ். பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி சமன்சிகேரா!

Sunday, 05, January, 2014
இலங்கை::யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களின் நடவடிக்கையிலும் தமிழ்மொழி மூல நடவடிக்கைகள் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி சமன்சிகேரா தெரிவித்தார்.

பொலிஸ் நிலையங்களில் தமிழில் முறைப்பாடுகளை பதிவுசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விட்டது. விரைவில் முழுமையான தமிழ் மொழி அமுலாக்கம் நடமுறைக்கு வரும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
நேற்றுக் காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், யாழ்ப்பாணத்திறத்கு புதிதாக பதவியேற்றுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர், தமிழ் மொழி அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் முழுமையான தமிழ் மொழி அமுலாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக விசேட செயற்திட்டத்தினை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தி வருகின்றார்.
 
குறிப்பிட்ட தொகை பொலிஸார் தமிழ் மொழி கற்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அக்கற்கைநெறியை முடித்த பொலிஸாருக்கு டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. அதே போன்று தொலைபேசி அழைப்புக்களை பொலிஸ் நிலையங்களில் இருந்து பெற்றுக் கொள்பவர்கள் அனைவருக்கும் தமிழ் மொழி தெரிந்து வைத்துள்ளார்கள்.
 
போதியளவு பொலிஸ் ஆளணியும் தற்போது யாழ். பொலிஸ் நிலையங்களில் உள்ளது. எனவே, முழுமையான தமிழ் மொழி அமுலாக்கத்தினை மிகவிரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

No comments:

Post a Comment