Friday, January 10, 2014

யாழ். , மன்னார் ஆயர்களின் கூற்று உண்மைக்கு புறம்பானது; இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மறுப்பு!

Friday, January 10, 2014
இலங்கை::முப்பது வருட காலமாக இலங்கையில் இடம்பெற்ற யுத்த வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கிளஸ்டர் குண்டுகளையோ, இரசாயன குண்டுகளையோ இலங்கை இராணுவம் பயன்படுத்தவில்லை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆயுதங்களை தவிர சம்பிரதாய
முறைக்கு அப்பால் எந்தவித ஆயுதங்களையும் யுத்தத்தின் போது பயன்படுத்தவில்லை என்று திட்டவட் டமாகத் தெரிவித்த அவர், இலங்கை இராணுவம் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது கொத்து (கிளஸ்டர்) மற்றும் இரசாயன குண்டுகளை பயன்படுத்தியதாக யாழ், மன்னார் மறைமாவட்ட ஆயர்கள் கூறியுள்ள கூற்றில் எந்தவித உண்மையும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
யாழ்ப்பாண ஆயர் தோமஸ் செளந்தர நாயகம், மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆகியோரின் கூற்றை இலங்கை இராணுவத்தின் சார்பில் தான் முற்றாக மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கை விமானப்படை ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி உறுதி செய்த பயங்கரவாதிகளின் இலக்கை தவிர வேறு எந்த இடத்திற்கும் விமானத் தாக்குதலை நடத்தவில்லை என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை வந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் போர் குற்ற விவகாரங்களைக் கையாளும் தூதுவர் ஸ்டீபன் ஜே ரெப் தலைமையிலான குழுவினரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், முல்லைத்தீவு புதுமாத்தளன் பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படை யினரால் விமானக்குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) மற்றும் இரசாயனக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்றும், இந்த மூன்று வகையான குண்டுத் தாக்குதல்கள் காரணமாக பெரும்பாலான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும் தூதுக்குழுவினரிடம் இவர் குறிப்பிட்டு ள்ளார். மன்னார் ஆயரின் இந்தக் கூற்றுத் தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரியவிடம் தொடர்புகொண்டு கேட்டபோது,
இலங்கை இராணுவம் யுத்த வரலாற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் யுத்த சம்பிர தாய முறைக்கு அப்பால் எந்தவித மான ஆயுதங்களை யும் பயன்படுத்த வில்லை. ஏனெனில் சகல சந்தர்ப்பங் களிலும் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள் ளப்பட்ட ஆயுதங் களையே (விonvலீntional தீலீapons) பயன்படுத்தி யுள்ளது. இந்நிலை யில் கொத்தணி மற்றும் இரசாயனக் குண்டுகளைப் பயன்படுத்துவதாகக் கூறுவதில் எந்தவித உண்மையும் கிடையாது. அந்தக் கூற்றை நான் திட்டவட்டமாக மறுக்கின்றேன்.
வெளிநாடுகளிலிருந்து பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் சிலரும், வெளிநாட்டில் சொகுசாக வாழ நினைக்கும் சிலருமே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தனர். இந்நிலையில் சகலராலும் மதிக்கத்தக்க கெளரவம் மிக்க ஒரு மதத் தலைவரான மன்னார் மறைமாவட்ட ஆயரின் மேற்படி கூற்று மிகவும் மன வருத்தத்துக்குரிய தொன்றாகும். ஏனெனில், இவ்வாறான கூற்றானது புலம்பெயர்ந்திருந்து எமது நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும் சிலரது செயற்பாடுகளுக்கு உந்துசக்தியாக அமைகின்றது.
அதேசமயம் மார்ச் மாதத்தில் நடை பெறவுள்ள ஜெனீவா மனித உரிமைப் பேரவையை இலக்காக வைத்தே சிலர் இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்களையும், கருத்துக்களையும் கூறிவருகின்றனர் என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இலங்கை பாதுகாப்புப் படையினர் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சகல சந்தர்ப்பங்களிலும் இழைப்புக்கள் இல்லாத முறையையே பேணி வந்தது. இந்நிலையில் விமானக் குண்டுத் தாக்குதல் தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது. விமானப்படையினர் ஆளில்லாத விமானத்தைப் பயன்படுத்தி பயங்கர வாதிகளின் நடமாட்டத்தை உறுதி செய்ததன் பின்னரே பயங்கரவாதிகளின் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தினர். மாறாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொதுமக்களை இலக்குவைத்தோ அல்லது பொதுமக்கள் நடமாட்டமுள்ள பிரதேசத்தை இலக்குவைத்தோ எந்தவித விமானத் தாக்குதல்களையும் நடத்தவில்லை என்பதை நான் திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறேன்.
எமது முப்படையில் அனேகமானோர் மேற்கத்தேய மற்றும் உலகின் பல நாடுகளின் பயிற்சிகளைப் பெற்றவர்கள். அவர்கள் சர்வதேச சட்ட விதிமுறைகள் பற்றி நன்கறிந்தவர்கள். அவர்கள் யுத்தத்தின் போது சகல சந்தர்ப்பங்களிலும் அந்த விதிமுறைகளைப் பேணியே வந்தனர் என்றும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment