Saturday, January 4, 2014

தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நாட்டின் பிரதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Saturday, January 4, 2014
இலங்கை::தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்தி கண்காட் சிக்கு சமகாலத்தில் மேற் கொள்ளப்படும் சகல அபிவிருத்தித் திட்டங் களும் தரமானதாக அமைவதுடன் உரிய காலத்தில் அவற்றை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
 
தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்திக் கண்காட்சி நாட்டின் பிரதான அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என குறிப்பிட்ட ஜனாதிபதி, அதன் பிரதிபலன்கள் எதிர்கால சந்ததிகள் பயன் பெறக்கூடியதாக அமைய வேண்டும் என்பதில் முக்கிய கவனம் செலுத்துவது அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.
2
014 'தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்திக் கண்காட்சியின் ஏற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றது. இந்நிகழ்வின் போதே ஜனாதிபதி அவர்கள் மேற்படி பணிப்புரையை விடுத்தார்.
 
தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்திக் கண்காட்சி மற்றும் இலங்கையின் சுதந்திர தின வைபவம் ஆகியன இம்முறை குளியாப்பிட்டியில் நடைபெறவுள்ளன.
 
வடமேல் பல்கலைக்கழகம், குளியாப்பிட்டி மத்திய மகா வித்தியாலயம், குளியாப்பிட்டி தொழில்நுட்ப வித்தியாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக 162 ஏக்கர் பூமி பிரதேசத்தில் இம்முறை "தேசத்திற்கு மகுடம்" கண்காட்சி நடத்தப்படவுள்ளது.
 
இதன் சமகாலத்தில் குருநாகல், கேகாலை, புத்தளம் மாவட்டங்களை இலக்காகக் கொண்டதாக பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. மேற்படி திட்டங்கள் தொடர்பில் மேற்படி பேச்சுவார்த்தையில் விரிவாக ஆராயப்பட்டன.

அமைச்சர்கள் பஷில் ராஜபக்ஷ, ரஞ்சித் சியம்பலாபிடிய, கெஹெலிய ரம்புக்வெல்ல, உட்பட பிரதியமைச்சர்கள், முக்கியஸ் தர்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment