Tuesday, January 21, 2014
நாகப்பட்டினம்::மத்தியமந்திரி ஜி.கே.வாசன் காரைக்காலில் நடந்த கட்சி நிர்வாகியின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு சென்றார். அப்போது அவருக்கு நாகூர் தர்கா டிரஸ்டி சார்பில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து தர்காவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதைதொடர்ந்து தர்காவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சிறுபான்மை மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் மத்திய அரசில் அமைச்சராக இருப்பதில் பெருமை அடைகிறேன். அந்த வகையில் நாகையில் உள்ள புகழ்பெற்ற தர்காவிற்கு வருகைபுரிந்து மனநிறைவோடு திரும்புகிறேன். குறிப்பாக உலகில் உள்ள அனைவரிடமும் அன்பு கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று போதித்தவர் நாகூர் ஆண்டவர்.
அவருடைய வழியை ஏற்று இன்றும் இஸ்லாமிய மக்கள் தங்களுடைய புனித பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இஸ்லாமிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் 3 பெரிய துறைமுகங்கள் கடந்த 5ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சி அடைந்துள்ளது.
மேலும் தமிழகத்தில் உள்ள சிறிய துறைமுகங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாகையில் உள்ள துறைமுகம் இந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்திற்கு வளம் தேடி கொடுக்ககூடிய, பொருளாதார நிலையை உயர்த்தக்கூடிய சிறிய துறைமுகமாக விளங்குகிறது.
நாகை துறைமுகத்தின் வளர்ச்சி குறித்து மத்திய கப்பல் துறை அமைச்சகம் ஆராய்ச்சி செய்து, துறைமுகத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும். பொதுவாக மத்திய அரசு, தமிழக அரசின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களின் அடிப்படையில் அடித்தளமாக செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக காரைக்கால் செல்லும் வழியில் திருவாரூரில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதற்கு விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். மத்திய அரசின் முயற்சியை முறியடிக்கும் வகையில் சிலர் செயல்பட்டு வருகிறார்கள். அது பலிக்காது.
காவிரி பிரச்சினைக்கு காவிரி மேலாண்மை குழு, காவிரி கண்காணிப்புக்குழு அமைப்பது தான் நிரந்தர தீர்வாக அமையும். அதை தான் விவசாயிகளும் விரும்புகிறார்கள். இதுகுறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி கூறி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment