Wednesday, January 22, 2014
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் நபரொருவரால் முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு மேல் மாகாணத்துக்கு பொறுப்பன சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்கவுக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
வீரபெருமலாகே ஷிவான் பிரியங்கர எனும் நபர் நேற்று முந்தினம் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டுக்கமையவே அதனை விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்கும் பொறுப்பு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனா நாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
குறித்த முறைப்பாட்டில் தான் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவுக்கு சொந்தமான பொருட்களை திருடிய குற்ரச்சாட்டில் கைது செய்யப்பட்டதாகவும் அந்த குற்றச்சாட்டு பொய்யானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திருடப்பட்டதாக கூறப்பட்ட மடிக்கணினி மற்றும் விஸ்கி போத்தல்கள் என்பன மங்கள சமரவீர எம்.பி.யினாலேயே தனக்கு வழங்கப்பட்டதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.
அத்துடன் வீட்டு வேலைக்காரர் ஊடாக முறைப்பாட்டை செய்வித்து தன்னையும் தனது குடும்ப வாழ்வையும் சீரழித்த மங்கள சமரவீரவுக்கு எதிராக சட்டத்தை அமுல் செய்யுமாறு அந்த முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment