Sunday,January,19, 2014
இலங்கை::தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு கரிதாஸ் எகட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சர்வமத மற்றும் சர்வ இன வேறுபாடுகளின் அடிப்படையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல் எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத இன அமைப்பு மீளமைப்பு செயலமர்வு நடைபெற்றது.
நேற்றைய முன் தினம், 2014.01.17ம் திகதி காலை முதல் முழுநாளாக மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் தேசிய சமாதானப் பேரவையின் பதில் நிகழ்ச்சி திட்டமிடல் இணைப்பாளர் சமன் செனவிரெட்ண தலைமையில் இச் செயலமர்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கிறிஸ்தவ மதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் தலைவர் அருட்தந்தை கிறைற்றன் அவுட்ஸ்கோன், இந்து மதத்தினைப் பிரதிநிதிஜத்துவப் படுத்தும் வகையில் சிவபாலன் குருக்கள், இஸ்லாம் மதத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மௌலவி அப்துல் காதர் ஆகியோர் கலந்து கொண்டனர் .
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து, இஸ்லாம், பௌத்த மற்றும் கிறிஸ்தவ சமயத்தினைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் மற்றும் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலகர் திருமதி புஸ்பா ரஞ்சனி மற்றும் சிரேஸட நிகழ்ச்சித் திட்ட அலுவலகர் சுரேஸ்குமார் கணக்காளர் எம். பசீன் சிரேஸ்ட இணைப்பாளர் ராஜா சேனாநாயக மொழி பெயர்ப்பாளர் திருமதி ஜெனி பரமேஸ்வரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மட்டக்களப்பு கரிதாஸ் எகெட் நிறுவனத்தின் தலைவர் அருட்தந்தை அவுட்ஸ்கோன் அவர்களின் பணிப்பின் பேரில் இச் செயலமர்வினைப் பார்வையிடுவதற்கு கபேர்ட் யு.கே (CAFORD UK)) நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளர் மகிந்த குணரத்ன லியம் கதரின் அம்மணி ஓகோஸ்தோ ஆகியோரும் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சர்வமத இன அமைப்பு மீளமைக்கப்பட்டதுடன் சமுக ரீதியில் இதன் செயற்பாடுகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டு ஆராயப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த தேசிய சமாதானப் பேரவையின் பதில் நிகழ்ச்சி திட்டமிடல் இணைப்பாளர் சமன் செனவிரெட்ண, சமாதானம், நல்லிணக்கத்திற்காக சர்வமத மற்றும் சமூகத்தலைவர்கள் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் 2010 ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சர்வமதத் தலைவர்கள், மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளின் பங்களிப்பில் மதங்களுக்கிடையிலான பேரவை உருவாக்கப்பட்டது. இதன்போது நியமிக்கப்பட்ட பேரவைப்பிரதிநிதிகள் மாதாந்தம் ஒன்றுகூடி நிகழ்ச்சியின் நோக்கங்களை அடையுமுகமாக பலதரப்பட்ட திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.
சுமூகங்களிடையில் பலதரப்பட்ட சந்தர்ப்பங்களில் ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் காரணமாக பல வேளைகளில் சமூகங்களுக்கிடையில் பாரியளவான இன, மத ரீதியான முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இம் முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் ஒரு பொறிமுறையை உருவாக்கவும், மாவட்ட அடிப்படையில் மதங்களுக்கிடையிலான பேரவையின் செயற்பாட்டைம Pள் கட்டி எழுப்புவதும் மிகவும் ஏதுவானதாகும்.
ஆகையினால் அதற்குரிய செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்ட மதங்களுக்கிடையிலான மற்றும் இன வேறுபாடுகளின் அடிப்படையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் என்ற இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.

No comments:
Post a Comment