Sunday, January 26, 2014
இலங்கை::தனது பதவி மற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்தி மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்து
வருவதுடன் அரசியல் ரீதியாகவும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் வடமாகாண
முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயற்பாடுகளுக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி.
இடையூறாக இருந்து வருவது குறித்து புத்திஜீவிகள் தமது அதிருப்தியையும் கண்டனத்தையும்
வெளிப்படுத்தியுள்ளனர்.மாகாண அபிவிருத்திக்காக மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றல் மற்றும் அரசியல் பேசி காலத்தை வீணடிக்காது அபிவிருத்தி பற்றிச் சிந்திக்க வேண்டும் என்ற முதலமைச்சரின் யதார்த்தமான பேச்சுக்கள் தொடர்பாக சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. தெரிவித்துவரும் மறைமுகமான எதிர்ப்பு அறிக்கைகள் குறித்தே புத்திஜீவிகள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
* ஜெனீவா பயணமும் ஐந்தாம் குறுக்குத் தெரு டொயிலட்டும்
சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்றாது எந்த முகத்துடன் இந்த அரசு ஜெனீவா செல்லப்போகிறது என மனோ கணேசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். மாநகர சபை தேர்தலில் அளித்து நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளுள் ஒன்றான 5ம் குறுக்குத் தெருவில் மலசலகூடத்தை கடந்த மூன்று வருடமாக அமைத்துக் கொடுக்காதவர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு மாகாண சபைத் தேர்தலில் அதே 5ம் குறுக்குத் தெருவிற்கு வாக்குக் கேட்டு வரப் போகிறாரோ தெரியவில்லை என்று நாம் கேட்கவில்லை, 5ம் குறுக்குத் தெரு நாட்டாமை நண்பர்கள் கேட்கிறார்கள்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
இதன் மர்மம் என்னவோ?
முஸ்லிம் காங்கிரஸிலுள்ள சகல அரசியல்வாதிகளுமே அரசாங்கத்தையும், அதன் செயற்பாடுகளையும் புகழ்ந்து வருகிறார்கள். அண்மையில் கிழக்கில் ஒரு பாடசாலை வைபவத்தில் கூட ஒரு மு.கா. எம்.பி. இந்த அரசாங்கமே முஸ்லிம்களுக்கு அதிகமாக சேவையைச் செய்துள்ளதாக மிகப் பெருமையாகப் பேசியுள்ளார். அது உண்மை, சகலருக்கும் தெரிந்த விடயம். இவ்வாறு தனித்தனியாக அரசைப் புகழும் இவர்களது கட்சியோ தேர்தல் என்று வரும்போது, தாம் புகழும் அரசுடன் இணைந்து நிற்காது அரசாங்கத்தைச் சாடி தனித்து நிற்பதாகப் புறப்பட்டு விடுவர். பின்னர் தேர்தல் முடிந்ததும் பழையபடி இணைந்து புகழ்பாடுவர். இதன் மர்மம் என்னவோ? இது வாக்களிக்கும் மக்களுக்குப் புரியாத புதிராகவே இன்னமும் உள்ளது.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
* தப்பித்துக் கொண்டார்
தம்பி தம்பிராசா-யாழ்ப்பாணத்தில் மூன்றாவது தடவையாகவும் சாகும்வரை உண்ணாவிரதமிருந்த கூட்டணியின் முக்கியஸ்தர் தம்பிராசா இத்தடவை ஏதோ கடவுள் புண்ணியத்தால் ஒருவாறு தப்பித்துக் கொண்டார். இவர் உண்ணாவிரதமிருப்பதை உள்ளூரில் எவருமே துளியளவும் கண்டு கொள்வதில்லை. ஆனால் இணையங்கள் சில இவரை ஹீரோவாக காட்டுவதைப் பார்க்கும் புலம்பெயர்ந்தவர்கள் சிலர் இவருக்கு ஆதரவாம். அதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பெரும் தலையிடியாம். ஆள் வைத்து கழிவு ஒயில் ஊற்றிப் பார்த்தனர், தம்பிக்கு பப்ளிசிட்டி பன்மடங்காகியது. உடனே சுரேஷ் பிரேமச்சந்திரனை அனுப்பி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். இதனால் இம்முறையும் சாகாது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட தம்பி தம்பிராசா அடுத்த சாகும் வரையிலான உண்ணாவிரதம் பற்றி யோசித்து வருகிறாராம்.
<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<

No comments:
Post a Comment