Saturday, January 4, 2014

பொங்கல் பரிசு திட்டம்: இன்று முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்!!

Saturday, January 4, 2014!
சென்னை::பொங்கல் திருநாளை முன்னிட்டு பொது மக்களுக்கு வழங்க உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி _ சேலை வழங்கும் திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று துவக்கி வைக்கிறார்..
நீலகிரி மாவட்டம் குன்னுனூர் தூய வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்தும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் விழா பேருரையாற்றுவார்.
பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் கடைகளில் அரிசி குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரொக்கமாக 100 ரூபாயும் வழங்கப்படும் என்று முதலமைச்சர்  ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த சிறப்பு பொங்கல் பரிசு ஒரு கோடியே 84 லட்சம் அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு கிடைக்கும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதே போல ஒவ்வொரு ஆண்டும் ஏழை _எளிய மக்களுக்கு அரசு சார்பில் இலவச வேட்டி_ சேலை வழங்கப்படுகிறது. விலையில்லா வேட்டி_ சேலையும் பொங்கலுக்கு முன்னதாக வழங்கப்படும்.விலையில்லா வேட்டி_ சேலை திட்டத்தின் மூலம் பல லட்சம் ஏழை குடும்பங்கள் பயன் பெற்று வருகின்றனர்.
சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி_ சேலை வழங்கும் திட்டங்களின் தொடக்க விழா நீலகிரி மாவட்டம் குன்னுனூரில் உள்ள வளனார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. முதலமைச்சர் ஜெயலலிதா திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.மேலும் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன் முடிவுற்ற பணிகளையும் தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேருரையாற்றுகிறார்.
விழாவில் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட கலெக்டர் பொ.சங்கர் உள்ளிட்ட அரசு துறை செயலாளர்கள், அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி_ சேலைகள் தமிழகம் முழுவதும் வினியோகம் செய்யப்படுகின்றன.திங்கட்கிழமை முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த விழாவை முன்னிட்டு குன்னுனூர் பகுதியில் முதலமைச்சரை வரவேற்க சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment