Thursday, January 23, 2014
இலங்கை::காவல்துறையினர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட வேண்டுமென காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கை::காவல்துறையினர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட வேண்டுமென காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மிகவும் அதிகளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறும் திணைக்களமாக காவல்துறைத் திணைக்களத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
2013ம் ஆண்டு முழுவதிலும் 9 காவல்துறை உத்தியோகத்தர்களை மட்டுமே லஞ்ச ஊழல்
ஒழிப்பு ஆணைக்குழுவினர், சந்தேகத்தின் பேரில் கைது செய்திருந்தனர் என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
காவல்துறையினர் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக குறிப்பிடப்பட்டால் அது
தொடர்பிலான சான்றுகள் முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இடமாற்ற உத்தரவுகளோ அல்லது பதவி உயர்வுகளோ அரசியல் ரீதியாக
வழங்கப்படுவதில்லை எனவும், அரசியல்வாதிகள் காவல்துறைத் திணைக்களத்தின்
நிர்வாக நடவடிக்கைகளில் தலையீடு செய்ய முடியாது எனவும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்
No comments:
Post a Comment