Sunday, January 26, 2014

பா.ஜ. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு: கருத்துக் கணிப்பு!

 Sunday, January 26, 2014
புதுடெல்லி::நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 210 முதல் 231 தொகுதிகள் வரை கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
 
நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளது. பா.ஜ. கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டு அவர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார். 
காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழு தலைவராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டு அந்த கட்சியும் பிரசாரத்தை தொடங்கி யுள்ளது. மற்ற தேசிய, மாநில கட்சிகளும் இப்போதே வேட்பாளர் தேர்வில் இறங்கி உள்ளன. 
இந்நிலையில், மக்களவை தேர்தலில் வெற்றி வாய்ப்புகள் குறித்து பல்வேறு அமைப்புகள் கருத்து கணிப்புகளை வெளியிடத் துவங்கியுள்ளன. 
தனியார் தொலைக் காட்சி நிறுவனம் ஒன்று 18 மாநிலங்களில் கருத்து கணிப்பு நடத்தியது. அதன் முடிவு வருமாறு _ 
பா. ஜ. க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 210 முதல் 231 வரையிலான இடங்கள் கிடைக்கும். 
இது வரை சந்தித்த தேர்தல்களில் இது மிகப் பெரிய வெற்றியாக இருக்கும். கடந்த 2009 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 116 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 
கடந்த 99 _ம் ஆண்டில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைத்த போது கூட இந்த கூட்டணிக்கு 188 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 
அதே சமயம் காங்கிரஸ் இந்த தேர்தலில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தோல்வியை சந்திக்கும். 
இந்த முறை அந்தக் கட்சிக்கு 107 முதல் 127 இடங்களில் மட்டுமே வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 
காங்கிரஸ் மட்டும் 92 முதல் 108 இடங்களில் வெற்றி பெறலாம். இவ்வாறு கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 
இதே போல் ஆங்கில பத்திரிகை ஒன்று தனியார் அமைப்புடன் சேர்ந்து நடத்திய கருத்து கணிப்பிலும் பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது. 
இந்த கணிப்பின் படி பா.ஜ.க. கூட்டணி 212 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணி 103 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிய வந்துள்ளது. 
மேலும், காங்கிரஸ் இது வரை இல்லாத வகையில் 2 இலக்கங்களில் சுருங்கி விடும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 
அதே போல் தெலுங்குதேசம், டி.ஆர். எஸ். , பிஜூஜனதா தளம், அ.தி.மு.க. , உள்ளிட்ட கட்சிகள் 50 தொகுதிவரை பிடிக்கலாம் என்றும், இவை பா.ஜ.க. அணிக்கு ஆதரவளிக்கலாம் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 
ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை டெல்லியில் மட்டும் சில இடங்களை கைப் பற்றும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. 
பிரதமர் வேட்பாளரை பொறுத்தவரையி ல், ராகுல் காந்தியை விட நரேந்திர மோடிக்கு வாக்காளர்களிடம் அதிக ஆதரவு உள்ளதாகவும், கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. 

No comments:

Post a Comment