Friday, January 10, 2014
இலங்கை::யுத்தத்தின் பின்னரான நல்லிணக்க முனைப்புக்களை அமெரிக்கா உதாசீனம் செய்து வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கு எதிராக போலி யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டை முன்வைக்கும் தரப்பினருடன் இலங்கை இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படாத நிலையில், இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்கா சிரத்தை காட்டி வருவதன் அவசியம் புரியவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்கா மேற்கொண்ட யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எவ்வித கேள்விகளும் எழுப்பப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அறிந்துகொள்ள ஐக்கிய நாடுகள் மனிதாபிமான இணைப்புச் செயலகத்தின் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்காவின் யுத்தக் குற்றச் செயல் தொடர்பிலான விசேட பிரதிநிதி ஸ்டீவன் ரெப்பிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு விவகாரங்களை மேற்கொள்ளக் கூடிய ஆற்றல் அரசாங்கத்திடம் காணப்படுவதாகவும், மக்கள் அதற்கான ஆணையை அரசாங்கத்திற்கு வழங்கியு;தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில அமெரிக்க அதிகாரிகள் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment