Tuesday, January 21, 2014

புதிய கிளிநொச்சி மாவட்ட ராணுவத் தளபதி ஆளுநரை சந்தித்து கலந்துரையாடினார்!


Tuesday, January 21, 2014
இலங்கை::கிளிநொச்சி மாவட்டத்திற்கு புதிய இராணுவ தளபதியாக பதவியேற்றிருக்கும் மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க 18 ஜனவரி 2014 அன்று வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.

2014 ம் ஆண்டுக்கான செயற்திட்டங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடினார்கள்
.
ஆளுநரும் புதிய கிளிநொச்சி மாவட்ட இராணுவத் தளபதியும் ஞாபகார்த்தப் பரிசுகளை பரிமாறிக் கொண்டார்கள்.

கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி வட மாகாணத்தின் இடர்காலப்பகுதியில் நீண்ட காலமாக கடமையாற்றிய அனுபவம் மிக்கவர். மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க பல ஆண்டுகளாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயமாக கடமையாற்றியவர். எல்.ரி.ரி.ஈ போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதிலும் அவர்களை அவர்களது குடும்பங்களுடன் இணைப்பதிலும் அளப்பரிய சேவையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment